நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு - கோவாவின் இரண்டாவது விமான நிலையத்தை கோலாகலமாக துவங்கி வைத்த பிரதமர் மோடி

கோவாவில் இரண்டாவது விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நிலையில் நாட்டில் இயங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்திருக்கிறது.

Update: 2022-12-11 11:15 GMT

கோவாவின் ஒரே விமான நிலையம் தபோலிமில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு இரண்டாவதாக மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 2870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் ஆகியவை புதிதாக அமைகின்றன. மேலும் கோவாவில் விமான பயணிகளை கையாளும் திறன் ஒரு கோடியே 30 லட்சம் அதிகரிக்கும். கோவாவில் நொய்டா சர்வதேச விமான நிலையத்துடன் நாட்டில் இயங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.


மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற போது 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது இரு மடங்காகி உள்ளது. அதற்கு வான்வழி தொடர்பை அதிகரிப்பதற்கும் புதிய விமான நிலையங்களை தொடங்குவதற்கும் பிரதமர் மோடி காட்டும் ஆர்வம் தான் காரணம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அருணாச்சல பிரதேசத்தில் நவம்பர் மாதம் இட்டாநகர் விமான நிலையத்தையும் ,ஜூலையில் ஜார்க்கண்டில் தியோகர் விமான நிலையத்தையும் கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரபிரதேசத்தில் புகழ்பெற்ற புத்த தலமான குஷி நகரில் சர்வதேச விமான நிலையத்தையும் மோடி திறந்து வைத்ததையும் கடந்த ஆண்டு நவம்பரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டியதையும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. நாட்டில் அடுத்த ஐந்தாண்டுகளில் 220 விமான நிலையங்களை மேம்படுத்தவும் இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





 




Similar News