'முதல்ல இந்த புத்தகத்தை படிச்சீங்களா? படிச்சா பேச மாட்டீங்க!' - நாடாளுமன்ற வார்த்தைகள் பயன்பாடு குறித்து ஓம் பிர்லா

நாடாளுமன்ற வார்த்தைகள் விவகாரம் தொடர்பாக சலசலப்பு எழுந்த நிலையில் அது குறித்து ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-07-15 05:42 GMT

நாடாளுமன்ற வார்த்தைகள் விவகாரம் தொடர்பாக சலசலப்பு எழுந்த நிலையில் அது குறித்து ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகின்ற 18ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எந்தெந்த வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்ற புத்தகத்தை மக்களவைச் செயலகம் நேற்று வெளியிட்டது.

அதில் ஊழல், கோழை, சர்வாதிகாரி, வெட்கக்கேடும், திட்டினார், துரோகம் செய்தார், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், காலிஸ்தானி உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் வழக்கம்போல் கண்டன குரல்கள் எழுப்பி வந்தன. இதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓம் பிர்லா கூறியதாவது, 'நீக்கப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியால் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எதிர்க்கட்சிகள் மட்டுமே பயன்படுத்தும் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நீக்குவது போன்ற எண்ணமெல்லாம் எதுவும் இல்லை அதை நீக்கப்பட்டு இருக்கின்றன தவிர எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை.


முன்பெல்லாம் இதுபோன்ற நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது காகிதங்கள் வீணாகாமல் இருக்க அதை இணையத்தில் வெளியிட்டுள்ளோம். இப்பொழுது நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம் இதில் எந்தவித வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை இது 1959 முதல் தொடரும் ஒரு வழக்கமான நடைமுறைதான் இது, மேலும் 1001 பக்கங்கள் கொண்ட இந்த அதிகாரிகள் அகராதியை அவர்கள் படித்திருக்கிறார்களா என தெரியவில்லை. அப்படி படித்திருந்தால் அவர்களுக்கு தவறான கருத்தை பரப்பி இருக்க மாட்டார்கள்' எனக் கூறிய விளக்கம் அளித்தார்.


Source - Junior Vikatan

Similar News