கரூரில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் திருக்கல்யாணம் - எப்போது? வெளியான தேதி!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கரூரில் சீனிவாச திருக்கல்யாணம் வருகிற 11-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

Update: 2022-06-03 11:45 GMT

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கரூரில் சீனிவாச திருக்கல்யாணம் வருகிற 11-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மதியம் 12:30 மணியிலிருந்து 1:30 மணிவரை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமிக்கு சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. அதில் பக்தர்கள் வழிபட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதில் இரண்டு பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம்.

மேலும் அதனைப் முன்பதிவு செய்வதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் காத்திருப்பதால் அனைவரும் காண முடியாத அளவிற்கு அது அபூர்வமான நிகழ்வாகும்.

இந்நிலையில் ஏழை எளிய பக்தர்கள் பங்கேற்று வழிபட முடியாத காரணத்தினால் கோவிலுக்கு வெளியில், வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இதற்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண உற்சவம் போன்ற ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது.

அந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11'ம் தேதி மாலை 5:30 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News