ஒரு கோடி பேர் தரிசனம்! அத்திவரதர், இன்று இரவு ஜலவாசம் செல்கிறார்! தமிழகம் முழுவதும் மழை கொட்டுகிறது!!

ஒரு கோடி பேர் தரிசனம்! அத்திவரதர், இன்று இரவு ஜலவாசம் செல்கிறார்! தமிழகம் முழுவதும் மழை கொட்டுகிறது!!

Update: 2019-08-17 05:26 GMT

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 47 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழாவில் வெள்ளிக்கிழமையுடன் தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து,வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில்  பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மழை கொட்டுகிறது.



காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி  ஆக.17 -ஆம் தேதி வரைதொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஜூலை மாதம் முழுவதும் 31 நாள்களுக்கு பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1 -ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்குஅருள்பாலித்தார்.




விழாவின் 47 -ஆவது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) பெருமாள் வெந்தய நிறப் பட்டாடையும், ரோஜா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்குஅருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்த பாதாம்பருப்பு, முந்திரி மாலையும், கதம்ப மாலைகளும் அணிந்திருந்தார்.
சகஸ்ர நாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.



நேற்று இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும்அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. அதன்பின்னர் நேற்று இரவுடன் அத்திவரதர்தரிசனம் நிறைவடைந்தது.



நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்தபாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது.
இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ளஅத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர்நிரப்பப்படும்.
அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரர், 40 ஆண்டுகளுக்கு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.



அத்திவரதர் ஜலவாம் செய்வதை முன்னிட்டு நேற்று முதல் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.



சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், வேளச்சேரி,தரமணி, கந்தன்சாவடி, போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அம்பத்தூர், அயனாவரம், ராமாபுரம், பூவிருந்தவல்லி உள்ளிட்டஇடங்களில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.



அதுபோன்று புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி உள்ளிட்டமாவட்டங்களிலும் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்துவருகிறது.



கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 18.7 செ.மீ, போளூரில் 10.7 செமீ மழை பதிவாகி உள்ளது.



கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Similar News