மக்களின் எதிர்ப்பால் அந்தர் பல்டி அடித்த ஸ்டாலின்! நேற்று போராட்டத்திற்கு ஆதரவு இன்று வாபஸ் பெறுங்கள்!!

மக்களின் எதிர்ப்பால் அந்தர் பல்டி அடித்த ஸ்டாலின்! நேற்று போராட்டத்திற்கு ஆதரவு இன்று வாபஸ் பெறுங்கள்!!

Update: 2019-08-27 10:27 GMT

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது தமிழக அரசு மருத்துவர்களின் பிரதான கோரிக்கை.


இந்த கோரிக்கைளை வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். அரசு மருத்துவர்கள் பெருமாள் பிள்ளை, நளினி, நாச்சியப்பன், அனிதா, அகிலன், ரமா ஆகிய 6 பேர் கடந்த வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். .


அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று ஆதரவு தெரிவித்தார். மேலும், திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, உண்ணாவிரதத்தில் பங்கேற்று வரும் மருத்துவர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க வைத்தார் ஸ்டாலின்.


இந்நிலையில் மக்கள் அனைவரும் ஸ்டாலின் மீது கோபத்தில் இருந்து வந்தனர் ஸ்டாலின் மருத்துவர்களுக்கு அறிவுரை கூறாமல் அதற்கு ஆதரவளிப்பது ஏழை மக்களை வஞ்சிக்கும் செயல் எனவும் மருத்துவர்கள் போராடினால் நாங்கள் ஏழைகள் எங்கு சென்று சிகிச்சை பெறுவது என புலம்பி வந்தனர். திமுக மருத்துவர்களுக்கா இல்லை ஏழை மக்களுக்கா என கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.


இந்நிலையில் இது குறித்து பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக ஏழைஎளியமக்களின் மருத்துவதேவையை அரசுஆஸ்பத்திரிகளை பாதிக்கும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பது ஏன்? தமிழ்மக்களை பாதிக்காதா? என கேள்வி எழுப்பினார்.




https://twitter.com/DrTamilisaiBJP/status/1166180295277604865


இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை வேலைக்கு திரும்புமாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் தேவை கருதியும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப் பணியின் அவசர முக்கியத்துவம் கருதியும் தங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், அரசு மருத்துவர்களின் கோரிக்கை பரிவுடன் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று ஆதரவும் இன்று வாபஸ் பெறுங்கள் என கூறுவதும் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போன்று அமைந்துள்ளது என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.


Similar News