தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் காய்கறி மற்றும் பழங்கள் : கோவை மாநகராட்சி அசத்தல்.!

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் காய்கறி மற்றும் பழங்கள் : கோவை மாநகராட்சி அசத்தல்.!

Update: 2020-04-19 02:00 GMT

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொது மக்கள் கடைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறி கடைகளில், சந்தைகளில் மக்கள் கூடும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை எதிர்கொள்ள அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

அந்த வகையில், வீட்டிற்கே காய்கறி மற்றும் பழங்களை டெலிவரி செய்யும் முறையை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. 90870 90820 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்தால் காய்கறி மற்றும் பழங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். இந்த தகவலை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

7.5 கிலோ கொண்ட காய்கறி காம்போ 300 ரூபாய்க்கும் 6 கிலோ கொண்ட பழங்கள் காம்போ 300 ரூபாய்க்கும் டெலிவரி செய்யப்படுகிறது. டிஜிட்டல் முறையிலும் கூட இதற்கான கட்டணத்தை செலுத்தலாம் என்பது மற்றொரு சிறப்பு அம்சம். 

Similar News