புல்வாமா சம்பவம் எதிரொலி! பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜப்பானுக்கு வர அனுமதி மறுப்பு - ஜப்பான் அரசு திட்டவட்டம்!

புல்வாமா சம்பவம் எதிரொலி! பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜப்பானுக்கு வர அனுமதி மறுப்பு - ஜப்பான் அரசு திட்டவட்டம்!

Update: 2019-02-25 08:30 GMT

காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற பகுதி வழியாக வரிசையாக சென்று கொண்டிருந்த இராணுவ வாகனங்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.


இதில் 40 கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா முழுவதும் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மேல் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் இந்திய அரசும் எல்லைப்பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் மீது வர்த்தக, பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜப்பான், அமேரிக்கா, பிரான்ஸ் உட்பட பல வல்லரசு நாடுகள் இந்தியாவின் நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


இந்தநிலையில் இந்தியாவின் கோபத்தை மீண்டும் சீண்டும் வகையில் இந்தியா சண்டைக்கு வந்தால் பதிலுக்கு மிகப்பெரிய போர் தொடுப்போம் என்று பாகிஸ்தான் இம்ரான்கான் கூறிவருகிறார்.


மேலும் இந்திய இராணுவத்துக்கு எதிரான போலியான வீடியோ படம் ஒன்றையும் தயாரித்து வைத்துக் கொண்டு இந்தியாவின் கோபத்தை மேலும் சீண்டி வருகிறார். இதனால் இரு நாடுகளுக்கிடையேயும் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொகம்மது குரேஷி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தார்.


இந்த நிலையில் ஜப்பான் அரசு குரேஷியின் வருகையை நிறுத்தி வைத்துள்ளது. “ இந்தியாவினுடனான பதட்டத்தை தணிக்கும் பணியில் முதலில் ஈடுபடுங்கள். பதட்டம் தணிந்ததும் பிறகு ஜப்பான் வரலாம்” என ஜப்பான் திட்டவட்டமாகக் கூறியதை அடுத்து குரேஷி தனது ஜப்பான் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன .


Similar News