ஏன் வேலையை ஒத்தி போடுகிறோம். பார்கின்ஸ் விதி சொல்லும் உளவியல் பார்வை.!

ஏன் வேலையை ஒத்தி போடுகிறோம். பார்கின்ஸ் விதி சொல்லும் உளவியல் பார்வை.!

Update: 2020-04-20 02:14 GMT

ஒரு நாளிலேயே முடியக்கூடிய வேலை தான் என்றாலும், நீங்கள் ஒரு வேளை பத்து நாட்கள் அதற்கு கொடுப்பீர்கள் எனில், "நீங்கள் கொடுத்த கால அளவை முழுமையாக பயன்படுத்தியபின்னரே அவ்வேலை முழுமை பெறும்" இதை தான் நவீன மேலாண்மையில் பார்கின்ஸ் விதி என்கிறார்கள். (Parkinson's Law)

எனவே பார்க்கினின் இந்த விதி நம் மேற்கொண்டுள்ள அனைத்து விதமான வேலைகளுக்கும் பொருந்தும். வீட்டு வேலைகள், மாணவர்கள் அவரவர் கல்வி நிறுவனத்தில் பெற்ற வீட்டு பாடம், ப்ராஜெக்ட் போன்றவை, பணியிடங்களில் வழங்கப்படக்கூடிய இலக்குகள் என அனைத்து தரப்பினருக்கும் பார்க்கின்ஸ் விதி பொருந்தும்.

சிலர் விபத்துப்போல ஒத்திப்போடுகிறார்கள். சிலர் இவ்வாறு திட்டமிட்டு ஒத்திப்போடும் சுழலை உருவாக்குகிறார்கள். சற்று விழிப்புடன் இந்த நேர விரயத்தை குறைத்தால் நாம் நம் திறனை இன்னும் கூட மெருகூட்டலாம், நம் திறமையை மேலும் சிறப்பாய் பட்டை தீட்டலாம். நாமாக உருவாக்கும் நெருக்கடியான அழுத்தத்திலிருந்து வெளியேறலாம்.

உங்களுக்கென ஒரு வேலை ஒதுக்கப்பட்டது, அந்த வேலையை முடிப்பதற்கு உங்களுக்கு வழங்கப்பட்ட கால அளவு மிக அதிகமானது. நேரம் தான் அதிகமாக இருக்கிறதே என்று அந்த வேலையை நீங்கள் செய்யவில்லை. ஆனால் உங்கள் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து ஒரு குரல் மட்டும் கேட்ட வண்ணமே இருக்கிறது நாம் அந்த வேலையை முடிக்க வேண்டுமே என்று.

இந்த சிந்தனை மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும் வேளையில். நாட்களும் கழிந்ததால் இப்போது அந்த வேலையை முடிப்பதற்கான காலகெடுவில் வெறும் இரண்டு நாட்கள் தான் பாக்கி. நீங்கள் அந்த வேலையை தொட்டுக்கூட பார்த்ததில்லை. இப்போது லேசாக அந்த வேலையை குறித்து அச்சம் கொள்கிறீர்கள், பதட்டம் அடைகிறீர்கள். அப்போது இரவு எது பகல் எது என்று கூட தெரியாமல் பணியாற்றுகிறீர்கள். உங்களை நீங்களே உற்சாகமாக வைத்து கொள்ள போராடுகிறீர்கள்.

உங்கள் யுத்திகள் அனைத்தும் பலிக்கின்றன. ஆனால் அது நிதர்சனத்தில் சாத்தியமாவதற்கு நீங்கள் உங்கள் கண்களை அயரவிடாமல் அதீத நேரம் போராட வேண்டியிருந்தது. நீங்கள் நினைக்கிறீர்கள் இன்னும் கூட கொஞ்சம் அதிகம் நேரம் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று. ஆனால் உண்மை என்ன, இந்த உலகில் உங்களிடம் தான் மிக அதிகமான காலகெடு இருந்தது ஆனால் இந்த நெருக்கடி நாம் உருவாக்கியது.

இந்த நெருக்கடியான சூழல் நமக்கு மட்டும் தான் ஏற்படுகிறதோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இது ஒரு பொதுவான உளவியல் பிரச்சனை.

ஒத்தி போடுவது பின்பு அதையே அழுத்தமாக எடுத்து கொள்வதென்பது பெரும்பாலானவர்கள் செய்கிற ஒரு விஷயம். இப்படி செய்வதால் மிக எளிமையான வேலைக்கு நம் அதிகபட்ச உழைப்பையும் விழிப்பையும் நாம் வழங்க வேண்டியிருக்கும்.

எத்தனை அதிகமான நேரத்தை அளிக்கிறீர்களோ அத்தனை மணி நேரம் அது தாமதமாகும்.

உங்களுடைய வேலை என்பது தண்ணீர் போன்று வடிவமில்லாததுலொரு சிறு குவளை நீரை பெரிய அகண்ட கிண்ணத்தில் ஊற்றினால், அந்த நீருக்கு தேவையான இடத்தை விடவும், அங்கு அதீதமாக எத்தனை இடம் இருக்கிறதோ அத்தனை இடத்தையும் ஆக்ரமித்துகொள்ளும். அதுப் போலத்தான் வேலைகளும் ஒரே வாரத்தில் முடிக்கக்கூடிய வேலைக்கு நீங்கள் ஒரு மாதம் கொடுத்தால் அது ஒரு மாதம் முழுவதையும் எடுத்து கொண்ட பின்பே முழுமைபெறும்.

Similar News