விவசாயிகள், வணிகர்களுக்கான பென்ஷன் திட்டம்: பிரதமர் மோடி நாளை ராஞ்சி நகரில் தொடங்கி வைக்கிறார்!!

விவசாயிகள், வணிகர்களுக்கான பென்ஷன் திட்டம்: பிரதமர் மோடி நாளை ராஞ்சி நகரில் தொடங்கி வைக்கிறார்!!

Update: 2019-09-11 09:36 GMT

வியாபாரிகளும், விவசாயிகளும் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.


பிரதான் மந்திரி லகு வியாபாரிக் மந்தன் யோஜனா, ஸ்வரோஜ்கர், பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா ஆகிய பெயர்களை உடைய ஒய்வூதியத் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.


"ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நாளை வரும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு அரசு நலப்பணி திட்டங்களை தொடக்கி வைக்கிறார்.


மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட விசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில், பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தையும், வியாபாரிகளுக்கு பிரதான் மந்திரி லகு வியாபாரிக் மந்தன் யோஜனா திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.


இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுள்ள விவசாயிகள் சேர முடியும். அவர்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகைக்கு ஏற்றார்போல் அதிகபட்சமாக மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை 60 வயதை அடைந்த பின் கிடைக்கும். இத்திட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 183 விவசாயிகள் பதிவு செய்து சேர்ந்துள்ளனர்.


அதேபோல வியாபாரிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுள்ள வியாபாரிகள் சேர முடியும். 60 வயதை அடைந்தவுடன் வியாபாரிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை பெறலாம்". இவ்வாறு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் நிருபர்களிடம் ராஞ்சியில் இன்று கூறினார். இவ்வாறு முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்தார்.


Similar News