மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிக்கும் விடுப்பு காலம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கு 730 நாட்கள் விடுமுறை என்று மதிய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-10 14:45 GMT

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய பணியாளர் நலத்துறை இணைமந்திரி ஜிதேந்திரசிங் கூறியதாவது:-

சிவில் சர்வீசஸ் பணிகளில் நியமிக்கப்படும் பெண் ஊழியர்களும் மனைவியை இழந்த ஆண் ஊழியர்களும் தங்கள் மொத்த பனிக்காலத்தில் இரண்டு மூத்த குழந்தைகளின் பராமரிப்புக்காக மொத்தம் 730 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ள தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். குழந்தைகளின் 18 வயது வரை இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்க வயது வரம்பு கிடையாது இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News