மாணவியிடம் பாலியல் சேட்டை - பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

விடுமுறை தினத்தில் பள்ளி மாணவியை அழைத்து பாலியல் அத்துமீறல் செய்த சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-07-26 05:21 GMT

விடுமுறை தினத்தில் பள்ளி மாணவியை அழைத்து பாலியல் அத்துமீறல் செய்த சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அதிக அளவில் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது, அதனை தொடர்ந்து முதுகலை பட்டப் படிப்பு வினாத்தாளரின் சாதி குறித்து இழிவாக கேள்வி இருந்தது.

எந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவுவாளராக பேராசிரியர் கோபி பெரியார் பல்கலைக்கழக குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் ஆராய்ச்சி படிப்பில் பயிலும் மாணவி ஒருவருக்கு வகுப்பு எடுத்து வருகிறார்.


அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகத்திற்கு வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு மாணவி வந்து சில மணி நேரத்திலேயே மீண்டும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாத சூழலில் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என அந்த மாணவி புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சம்பந்தப்பட்ட மாணவி. மாணவியின் தரப்பில் இருந்து ஆராய்ச்சி வகுப்பிற்காக சென்ற தன்னிடம் பல்கலைக்கழக பதிவாளர் பாலியல் ரீதியாக தொல்லை தந்தாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருப்பூர் காவல் நிலைய தரப்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கோபி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Source - One India

Similar News