மணக்குள விநாயகர் கோவில் லக்ஷ்மி யானையை மீண்டும் கோவிலிலிருந்து பிரிக்க உயர் நீதி மன்றத்துக்கு PETA மனு.!

மணக்குள விநாயகர் கோவில் லக்ஷ்மி யானையை மீண்டும் கோவிலிலிருந்து பிரிக்க உயர் நீதி மன்றத்துக்கு PETA மனு.!

Update: 2020-08-03 09:22 GMT

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை மீண்டும் அதன் இருப்பிடத்திலிருந்து அழைத்துச் செல்ல PETA அமைப்பு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்துக்குச் சனிக்கிழமை அன்று மனு அளித்துள்ளது. இம்முயற்சி, புதுச்சேரி முதல்வர் V. நாராயணசாமி தலையிட்டு யானையைக் கோவிலுக்கு அழைத்துவந்த இரண்டு வாரங்களுக்குப் பின்பு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி வனத்துறையினர் தமிழ்நாடு யானைகள் சிறைபிடிப்பு சட்டம் 2011 படி லட்சுமி யானையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றனர் என்று ட்விட்டர் பயனாளி முரளி தெரிவித்துள்ளார். 40 நாட்களுக்குப் பிறகு கோவிலுக்குத் திரும்பிய யானை மிகவும் உற்சாகமாகவும் அமைதியுடனும் கோவிலில் இருப்பது போன்று தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லட்சுமி யானையை இந்து மதத்தினரிடமிருத்து பிரிக்கப் பார்க்கின்றனர் என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. "நாங்கள் இம்முறை PETA வை இணையம் மூலம் மட்டும் எதிர்கொள்ள மாட்டோம் என்று எச்சரிக்கிறோம் மேலும் லட்சுமியைக் கோவிலில் வைத்துக்கொள்ள எது வேண்டுமானாலும் செய்வோம்" என்று அவ்மமைப்பு தனது ட்விட்டில் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று PETA தனது ட்விட்டில், "பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக விலங்குகளைச் சித்திரவதை அல்லது சிறைபிடிக்கவோ கூடாதென்று " தெரிவித்துள்ளது. "விலங்குகள் உரிமை ஆணையம் " வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் யானை புகைப்படத்துடன்

"துஷ்ப்ரயோகம் நமதுடையதல்ல" என்றிருந்தது. விலங்குகள் சித்திரவதை செய்வது குறித்து அது தெரிவிக்கின்றது. விலங்குகள் தங்கள் குடும்பத்துடன் காட்டில் வாழ விரும்புகின்றன, அதை விடுத்து அதனைச் சவாரி செய்வதற்கோ சர்க்கஸ் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது தவறாகும். PETA தொடர்ந்து விலங்குகளிடம் அன்பைக் காட்டுவது குறித்து வலியுறுத்தி வருகிறது. மேலும் அந்த அமைப்பு முஸ்லிம்களின் வழிகாட்டுதல் நூலில் கூறப்பட்டிருக்கும் விலங்குகளிடம் வன்முறை செய்வது தவறும் என்னும் செய்தியை வலியுறுத்தி வருகிறது.

கோவில் விலங்குகளுக்குக் கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 மீறியதாகக் கூறி PETA மற்றும் விலங்குகள் நலவாரியம் லட்சுமி யானையை அதன் இருப்பிடத்திலிருந்து அகற்றியது. பா.ஜ.க தலைவர் மேனகா காந்தி இவ்விவகாரத்தில் தலையிட்டு, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி மற்றும் வனம் மற்றும் விலங்குகள் நல வாரியத்திடம் லக்ஷ்மியைக் கோவிலிலிருந்து அகற்றிப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி லக்ஷ்மியைக் கோவிலிலிருந்து அகற்றி குருமம்பேரில் உள்ள கிரிஷி விஜியன் கேந்திர என்ற இடத்தில் கொண்டு சேர்த்தனர். அங்கு அதன் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஜூலை 18 அன்று மீண்டும் லக்ஷ்மி யானை மணக்குள விநாயகர் கோவிலுக்கு V. நாராயணசாமி வனத்துறையினருக்கு விடுத்த உத்தரவின் படி கொண்டுவரப்பட்டது என்று இந்து மக்கள் கட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டது. இம்முயற்சி காங்கிரஸ் கட்சியினரால் ஊடகங்களில் உறுதி செய்யப்பட்டது.



source:https://www.opindia.com/2020/08/peta-lakshmi-elephant-manakula-vinayagar-temple-puduchery-madras-high-court-remove-petition/

Similar News