PFI & SDPI இரண்டும் பயங்கரவாத இயக்கங்கள் - கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி

A Kerala High Court judge has declared both PFI and SDPI terrorist organizations.

Update: 2022-05-14 08:45 GMT

PFI மற்றும் SDPI இரண்டும் பயங்கரவாத இயக்கங்கள் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் சஞ்சித் என்பவர் படுகொலை செய்யப்பட்டார், இதனைத் தொடர்ந்து அவரின் மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ஹரிபால் கூறியதாவது, 'PFI எனப்படும் இந்திய பாப்புலர் முன்னணி மற்றும் இந்திய சோசலிச ஜனநாயகக் கட்சி ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை' என கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, 'வன்முறை போன்ற தீவிரமான குற்றங்களை இந்த இயக்கங்கள் செய்து வரும் போதும் அவை தடை செய்யப்படவில்லை' என்றார் அவர்.

இக்கொலை வழக்கில் PFI மற்றும் SDPI அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் வழக்கு பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் சமீபத்தில் தமிழக ஆளுநர் ரவி 'PFI மற்றும் SDPI அமைப்புகளை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்' என கூறியதும் குறிப்பிடத்தக்கது.


Source - Polimer

Similar News