பணி ஓய்வு பெற்றவரா? ரிட்டையமென்ட்க்கு( retirement) பின் என்ன பண்ணலாம்.?

பணி ஓய்வு பெற்றவரா? ரிட்டையமென்ட்க்கு( retirement) பின் என்ன பண்ணலாம்.?

Update: 2020-01-03 03:13 GMT

நீங்கள் அப்போது
பணிக்கு செல்லஅமல் ஓய்வாக இருப்பீர்கள். எந்த வித அலுவலக
பொறுப்பு, பதவி, அதிகாரம் என எதுவும் இருக்காது. எந்த செல்வாக்கும்
செல்லுபடியாகது. உங்களின் பணப்புழக்கம் குறைந்திருக்கும். எனவே உங்கள் வங்கி
இரசீதுகளில் உங்களின் பணியோய்வின் தேதியை தேடிப்பாருங்கள்


30 நாள் வருடாந்திர
விடுப்பில் செல்லுங்கள்.


 நீங்கள் நீண்ட விடுப்பில் எதை செய்கிறீர்களோ அதை
தான் உங்கள் பணியோய்விலும் செய்வீர்கள். நீங்கள் வெறுமனே தூங்கி தொலைகாட்சி
பார்பவராக இருந்தால் பணியோய்வின் போதும் அதை தான் பெரும்பாலும்
செய்யயிருக்கிறீர்கள் என்று பொருள். பழமொழி ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், குட்டி உறக்கங்களும், சின்ன சின்ன மயக்கங்களும் உங்கள்
வறுமையை பெருக்கும். எனவே ஓர் வணிகத்தையோ அல்லது திறனையோ உங்கள் விடுப்பில் கற்று
கொள்ளுங்கள். உங்கள் அலுவலகம் முடிந்து மீதமிருக்கிற நேரத்தை கற்று கொள்ள
பயன்படுத்துங்கள். உறங்குவது, ஊர் கதை பேசுவது,
வாரயிறுதிகளை கொண்டாட்டங்களிலேயே கழிப்பது என்பதை மட்டுமே செய்யாமல்
சற்று உபயோகரமான செயல்களிலும் உங்களின் ஆற்றலை செலுத்துங்கள். இந்த செயலுக்கு நிச்சயம்
நீங்களே உங்களுக்கு நன்றி செலுத்தி கொள்ளும் காலம் வரும்.


உங்கள் ஓய்வு
காலத்திற்கென முதலீடு செய்யுங்கள்.


உங்கள் குழந்தைகள்
உங்கள் ஓய்வு காலத்தின் முதலீடுகள் அல்ல. உங்கள் குழந்தைகளையோ உறவினர்களையோ உங்களை
காப்பதற்கான மாற்று வழியாக பார்பதை நிறுத்துங்கள். இது ஓர் பெரும் அபாயம், நீங்கள் தேர்வு செய்யும் இந்த வழி சரியானதாக இல்லாமலும்
போகலாம். உங்களை நீங்களே பார்த்து கொள்ள தயாராகுங்கள். அனைவருக்கென்றும் சில
தனிப்பட்ட பொறுப்புகள் இருக்கின்றன என்பதை உணருங்கள். ஒருவரை சார்ந்திருத்தலில்
உங்களின் சுயம் அழிகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்


ஓர் தரமான
பொழுதுபோக்கை உருவாக்கி கொள்ளுங்கள்


உங்கள் நாளின்
துவக்கத்தில் தரமானபொழுதுபோக்கிற்கென சில நிமிடங்களை ஒதுக்குங்கள் அது உங்கள்
ஓய்வு காலத்தில் உங்களை நீங்களே தரமாக இயக்கி கொள்ள உதவும். கோழி வளர்த்தல்,
விவசாயம் என எதுவாக வேண்டுமானலும் உங்கள்
விருப்பத்தின் அடிப்படையில்  அமைக்கலாம்.


உங்கள் ஓய்வு
காலத்தை எங்கே கழிப்பீர்கள்


உங்களுக்கென ஓர்
இல்லத்தை உருவாக்குங்கள். ஓய்வு பெற்றதற்க்கு பின் வாடகைக்கு வீடு தேடாதீர்கள்
தங்கியிருந்த அரசு வீட்டை காலி செய்ய தயங்காதீர்கள். உங்கள் பணபுழக்கம்
குறைந்திருக்கும் போது உங்கள் நில உரிமையாளரின் கருணையின் அடிப்படையிலேயே உங்கள்
தங்குமிடத்தின் காலம் கெடு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்


ஓய்வுக்கு பின்
பெருநகரங்களை தேர்வு செய்யாதீர்கள்


உங்களால் பெரும் செலவுகளை செளகரியமாக ஏற்கமுடியாத சூழல்
ஏற்படுமெனில் தயவு செய்து பெருநகரங்களை தேர்வு செய்யாதீர்கள்.. எல்லைக்குட்பட்ட
பொருளாதார வளத்தை வைத்து கொண்டு 60 வயதிற்க்கு மேல்
பெருநகரங்களில் வாழ்வதென்பது சவால். எனவே உங்கள் வருவாய்க்கான இடத்தில்
இருக்கிறீர்களா என்பதை உணர்ந்து உங்கள் ஓய்விடத்தை தேர்வு செய்யுங்கள்


வருவாய் தரக்கூடிய
சொத்துக்களை உருவாக்குங்கள்


நல்ல வருவாயை
கொடுக்கு பங்குகள். ஆடு வளர்ப்பு, காய்கறி விவசாயம்,
வீடுகளில் இருந்து கிடைக்கும் வாடகை என
எந்தவொன்று உங்களுக்கு வருவாயை கொடுக்கும் அது போன்ற சொத்துக்களில் முதலீடு
செய்யுங்கள்.


பெரும்பாலான மூத்த
குடிமக்கள் ஓய்வு காலத்திற்க்கு பிறகு நிம்மதியாக
இருப்பதில்லை என்று ஆய்வுகள்
சொல்கின்றன அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் இது தான்


அவர்கள் ஓய்வு
காலத்திற்க்கு மனதளவில் தயாராகவில்லை


போதுமான பொருளாதார
வளமின்மை


அழுத்தத்திற்க்கு
ஆட்படுதல்


கவலை, வருத்தம், பாதுகாப்பின்மையினால்
சர்க்கரை, இரத்த அழுத்தம்
போன்ற நோய்களுக்கு உள்ளாதல்


உங்கள் பணியில்
இருக்கும் இன்றைய மேஜையே நிரந்தரமல்ல. எனவே உங்கள் ஓய்வு காலத்திற்க்கும்
திட்டமிடுங்கள்.


Similar News