அடுத்த 25 ஆண்டுகளுக்கான் 'அம்ரிக் கால புலிகள் விஷன்' - பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டம் என்ன?
இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் 200 புலிகள் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தேசிய விலங்கு புலி அழிந்து வரும் வனவிலங்கு பட்டியலில் உள்ளது . இதை தொடர்ந்து புலிகளை காக்கும் வகையில் கடந்த 1973 ஆம் ஆண்டு புலிகளை பாதுகாக்கும் பொருட்டு புலிகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டன . இந்த திட்டம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் ஆகிறது. இதை ஒட்டிப் புலிகள் காப்பக பொன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று மைசூரில் புலிகள் காப்பக பொன்விழா நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் . இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தமிழ்நாடு சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்று விட்டு தனி விமான மூலம் இரவு 9:45 மணியளவில் மைசூருவுக்கு வந்தார்.
மைசூரில் உள்ள ஓட்டலில் இரவு தங்கிய அவர் நேற்று காலை 6:30 மணியளவில் மைசூர் ஓவெல் மைதானத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டை அருகே பந்திப்பூர் புலிகள் சரணாலய பகுதிக்கு காலை 7.30 மணிக்கு வந்தார். அவர் பந்திப்பூருக்கு வந்ததும் வன உயிரினங்களின் தாக்குதலால் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு சின்னத்தில் மலர்வலையம் அமைத்து மரியாதை செலுத்தினார். முதலில் அங்கு சிங்கம் சிறுத்தை புலி உருவம் வரையப்பட்ட இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் இயற்கை எழில் கொஞ்சும் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காலை நேரத்தை கழித்தேன். இந்தியாவின் வனவிலங்குகள் இயற்கை அழகு மற்றும் பன்முகத்தன்மை கண்டு ரசித்தேன் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். மைசூர் திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புலிகள் திட்டத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார்.