அயோத்தி இயக்கம் முதல் ராமர் கோயில் பூமி பூஜை வரை.! பிரதமர் மோடி அன்றும் இன்றும்.!

அயோத்தி இயக்கம் முதல் ராமர் கோயில் பூமி பூஜை வரை.! பிரதமர் மோடி அன்றும் இன்றும்.!

Update: 2020-08-06 13:44 GMT

மத்திய அரசில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற 6 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது அவருடைய தீர்மானங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை எப்பொழுதுமே ராமர் கோவில் கட்டுமானத்திற்கு முக்கியத்துவத்தை அழைத்து வந்தாலும், அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் அப்போது வேறு எதுவும் செய்திருக்க முடியாது.

ஆனால் தான் ஹிந்து என்ற அடையாளத்தை, தன் நெற்றியில் பூசும் விபூதியிலும் தன் கழுத்தில் அணியும் ருத்ராட்சமாலையிலும் அணிவதற்கு பிரதமர் மோடி என்றைக்கும் தயங்கியதில்லை. அயோத்தி ராமர் கோயில் இயக்கத்தில் அவருடைய பங்களிப்பு கடந்த சில நாட்களாக, பல புகைப்படங்கள் மூலமாகவும் பல கதைகள் மூலமாகவும் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இங்கே புகைப்படங்களின் வாயிலாக மோடியின் பயணம், அயோத்தி இயக்கத்திலிருந்து பூமி பூஜை வரை எவ்வாறு சென்றது என நாம் பார்க்கலாம். 2019தேர்தல் பிரச்சாரத்தில் அயோத்தியில் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய வீடியோவை காணலாம். 1990களில் LK அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையில் திரு நரேந்திரமோடி முக்கியமான பங்களித்தார்.

அத்வானி ரத யாத்திரையில் அவருக்கு அருகில் பல புகைப்படங்களில் நாம் பிரதமர் மோடியை பார்க்கலாம். அவருடைய பேச்சுக்களின் போது அவருக்கு ஆதரவு கொடுப்பதையும் பார்க்கலாம். அவருடைய அரசியல் கூட்டமாக இருந்தாலும் சரி, அத்வானி, தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது மோடியும் அமித் ஷாவும் உடனிருந்தனர். ஒரு புகைப்படத்தில் மோடியும் அத்வானியும் அருகில் இருப்பதையும், பின்னால் அமித்ஷா இருப்பதையும் பார்க்கலாம். 










 இன்னொரு புகைப்படத்தில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் பேரணியில் ஒரு தன்னார்வலராக மக்களுடன் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். முரளி மனோகர் ஜோஷியுடன் 1991இல் பிரதமர் மோடி அயோத்தியில் இருந்தார். புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் மகேந்திரா திருப்பதி இந்தப் புகைப்படத்தை எடுத்த போது, நீங்கள் மறுபடியும் அயோத்திக்குத் திரும்பி வருவீர்களா என்று கேட்டபோது டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின்படி, ''ராமர் கோயில் கட்ட ஆரம்பிக்கும்போது நான் திரும்பி வருவேன்" என்று கூறினார். அதே போல் தான் நடந்தது. 








 2020 ஆகஸ்டில் ராமர் கோவிலின் பூமி பூஜையின் போது இந்தியாவின் பிரதமராக வந்து சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி, பூமி பூஜையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.




 






 ராமர் கோவிலுக்கான பூமி பூஜையை அயோத்தியாவில் பிரதமர் மோடி நிறைவேற்றிய போது ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷங்கள் உலகம் முழுவதும் எதிரொலித்தது. ஏனெனில் பல கோடிக்கணக்கான இந்துக்கள் 500 ஆண்டுகளாக மேற்கொண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது அல்லவா?

Courtesy: https://www.opindia.com/2020/08/narendra-modi-ayodhya-andolan-ram-mandir-pics-old-new/ 

Similar News