ஆயுத ஒப்பந்தங்களில் ஊழல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார் - ஜே.பி நட்டா பாராட்டு.

ஆயுத ஒப்பந்தங்களில் ஊழல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார் என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்தார்.

Update: 2022-10-13 10:15 GMT

இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் பணிகள் பணிகளை ஆளும் பா.ஜனதா ஏற்கனவே தொடங்கியுள்ளது.கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து இந்த பணிகளை முடிக்கிவிட்டார்.இதன் ஒரு பகுதியாக தனது சொந்த மாவட்டமான பிலாஸ்பூரில் நேற்று உள் விளையாட்டு அரங்க ஒன்றை தெரிந்து வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசி அவர் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினார். தனது உரையில் அவர் கூறியதாவது:-


இந்தியா கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி வந்தது. இந்த ஒப்பந்தங்களில் பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளன. போபர்ஸ் ஊழல்,ஹெலிகாப்டர் ஊழல் நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் ஊழல் என பல்வேறுமுறை ஊழல்களும் நடந்துள்ளன. ஆனால் இன்று உலகுக்கு இந்திய ஆயுதங்களை விற்பனை செய்கிறது. தற்போது ஆயுத விற்பனை ஆறு மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் ஆயுதக் கொள்முதலில் நிகழ்ந்து வந்த ஊழல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்.


இதேபோல பிலாஸ்பூர் எய்ம்ஸ் கட்டுமான பணி ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் கட்டுமான பணிகள் நடைபெறாத போதும் மருத்துவமனை பணிகள் வேகமாக நடந்து முடிந்துள்ளன. இவ்வாறு ஜே.பி நட்டா கூறினார்.


இதேபோல மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசும், மாநிலத்தில் ஜெயராம் தாகூர் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பணிகளை பட்டியல் இட்ட அவர் இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா அரசு தொடர வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.





 


Similar News