தமிழகத்தின் முதல் பாரத் ரயில் - பிரதமர் மோடி தொடங்கி வைக்க தமிழம் வருகை!
சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை உட்பட 294 கோடி மதிப்பிலான மூன்று ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் எட்டாம் தேதி தமிழகம் வரஇருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிவேக ரெயில் சேவையை அமல்படுத்தும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி வாரணாசி இடையே வந்தே பாரத் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. ரயில் சேவை பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால் இந்த ரயிலை பயன்படுத்த பயணிகள் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கினர். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சென்னை மைசூர் இடையே ஐந்தாவது வந்தே பாரத் திரையில் இயக்கப்பட்டது. தற்போது 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த அதிவேக ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மைசூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் 20 ஆயிரம் பேர் வரையில் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர் . இந்த நிலையில் தமிழகத்திற்குள் வந்தே பாரத் ரெயில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டது . இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது . அதன்படி தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையானது சென்னை கோவை இடையே தொடங்கப்படஉள்ளது. இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்ரல் எட்டாம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது .
அன்றைய தினம் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையில் 37 கிலோமீட்டர் தூர அகல ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும். விரைவில் சேவையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது .இந்த மூன்று திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூபாய் 294 கோடி ஆகும். சென்னை கோவை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத்தின் சேவையானது தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் ஆகும் .தமிழகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.