திரௌபதி முர்மு இந்திய பெண்களின் உத்வேகம் - பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி! ஏன்?

ஜனாதிபதி திரவுபதி முர்மு போர் விமானத்தில் பறந்ததை முன்னிட்டு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Update: 2023-04-10 03:45 GMT

ஜனாதிபதி திரவுபதி முர்மு  அசாம் மாநிலத்தில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்தார் .பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அவர் முப்படைகளின் உச்ச தளபதி என்ற முறையில் அங்கிருந்து அவர் 25 நிமிடம் சுகோய் ரக போர் விமானத்தில் பறந்தார். இதுதான் போர் விமானத்தில் அவரது முதல் பயணம். இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த நாட்டின் மூன்றாவது ஜனாதிபதி என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஜனாதிபதிகளாக இருந்த பிரதிபா பாட்டீலும், அப்துல் கலாமும்  விமானத்தில் பறந்துள்ளனர்.


இந்த போர் விமான பயணம் நன்றாக இருந்ததாக கூறி ஜனாதிபதி திரவுபதி முர்மு மகிழ்ச்சி தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த போர் விமான பயணத்தை பிரதமர் மோடி பாராட்டி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் "இது ஒவ்வொரு இந்தியருக்கு உத்வேகம் அளித்துள்ளது. ஜனாதிபதி சிறப்பான தலைமைத்துவத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்" எனக் கூறியுள்ளார்.



 




Similar News