பிரதமர் மோடி அத்திவரதரை 2 கோலங்களில் கண்டு தரிசிக்க 2 முறை காஞ்சி வருகிறார் !! அமித்ஷா , நிர்மலா சீத்தாராமனுடன் உடன் வருகை!!

பிரதமர் மோடி அத்திவரதரை 2 கோலங்களில் கண்டு தரிசிக்க 2 முறை காஞ்சி வருகிறார் !! அமித்ஷா , நிர்மலா சீத்தாராமனுடன் உடன் வருகை!!

Update: 2019-07-29 11:45 GMT

நாளை மறுநாள் 31-ம் தேதி காஞ்சிபுரம் வருகை தரும் பிரதமர் மோடி அன்று சயன கோலத்தில் உள்ள அத்திவரதரை தரிசித்து விட்டு சென்னை சென்று தங்குகிறார். மறுநாள் 1- ந்தேதி மீண்டும் காஞ்சி சென்று அன்று முதல் நின்ற கோலத்தில் தரிசனம் தர உள்ள அத்திவரதரையும் கண்டு தரிசிக்கவுள்ளார்.


அத்திவரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும் அதன் பின்னர் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் தருவார் என்று முதலில் கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்திவரதர் 31-ம் தேதி வரை சயன கோலத்திலும் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்திலும் காட்சி தருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி வருகிற 31-ம் தேதி காஞ்சிபுரம் வருகிறார். அவருடன் உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரும் வருகிறார்கள். விமானம் மூலம் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சென்னை வருகிறார்கள். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து காரில் வரதராஜபெருமாள் கோயிலுக்கு செல்கிறார்கள்.


அங்கு சயன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை தரிசித்து விட்டு மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பி அன்றைய தினம் இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் தங்குகின்றனர்.


மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதி நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தரிசிக்கின்றனர். மோடி வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் சத்யபிரகாஷ் காஞ்சிபுரத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.


பிரதமர் மோடி வருகையொட்டி காஞ்சிபுரத்தில் நாளை முதல் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. நாளை முதல் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.


Similar News