இம்ரான் கான் எங்களை கொல்லப்பார்க்கிறார் - இந்தியா தான் எங்களுக்கு உணவு வழங்க வேண்டும் : பாகிஸ்தானில் கெஞ்சும் மக்கள்!

இம்ரான் கான் எங்களை கொல்லப்பார்க்கிறார் - இந்தியா தான் எங்களுக்கு உணவு வழங்க வேண்டும் : பாகிஸ்தானில் கெஞ்சும் மக்கள்!

Update: 2020-04-18 12:14 GMT

உள்நாட்டு மோதல்களால் மிகவும் கஷ்டப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான Gilgit-Baltistan கொரோனா தொற்றின் காரணமாக  மீண்டும் சிக்கலான நிலையை எதிர்கொண்டுள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்கள் இந்தியாவின் ராஜோரி மற்றும் ஜம்மு வழியாக உணவு அனுப்புமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும், Gilgit-Baltistan பகுதியிலும் பாகிஸ்தான் குவித்து வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இப்போது பாகிஸ்தான் அரசாங்கம் உணவு விலையை கட்டுக்குள் வைக்கத் தவறிவிட்டது.

முன்னதாக, 20 கிலோகிராம் மாவு வாங்க 700 பாகிஸ்தான் ரூபாய் செலவாகும். ஆனால் இப்போது 1200 பாகிஸ்தான் ரூபாய் செலவாகும்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மாவு ஆலைகள் அசாதாரண விலையில் மாவு பைகளை சில்லறை விற்பனை செய்கின்றன. இந்திய யூனியனில் சட்டபூர்வமாக இருக்கும் இந்த பிரதேசத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது, மேலும் இம்ரான் கான் அரசாங்கம் பொறுப்பற்ற ஆக்கிரமிப்பாளரைப் போலவே செயல்படுவதாக மக்கள் கூருகின்றனர். இதற்கிடையில் உள்ளூர் அரசாங்கம் எந்தவொரு நிதி உதவியும் மருத்துவ உள்கட்டமைப்பும் செய்து கொடுக்காமல் மக்கள் திணறி வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க உள்ளூர் அரசாங்கத்திற்கு போதுமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்காததற்காக Gilgit-Baltistan  "முதலமைச்சர்" ஹபீஸ் ஹபீசூர் ரெஹ்மான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது கடும் அவதூறு பரப்பியுள்ளார். அவர் பாகிஸ்தான் அரசிடமிருந்து ரூ .1.75 பில்லியன் கோரியுள்ளார்.

ஏற்கனவே வீழ்ச்சியில் இருந்த பாகிஸ்தானின் பொருளாதாரம் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் முடங்கிப்போயுள்ளது. மேலும் இம்ரான் கான் அரசாங்கம் இந்து சிறுபான்மையினருக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வேண்டுமென்றே மறுத்து வருகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள் இந்தியாவின் ராஜோரி மற்றும் ஜம்மு வழியாக உணவு அனுப்புமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Similar News