பொது இடத்தில் பிராங்க் செய்த யூடூபரை வளைத்த போலீஸ் - பின்னணி என்ன?

பொது இடத்தில் குந்தகம் விளைவித்த காரணத்திற்காக ஆபாச youtube சேனலை சேர்ந்தவரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

Update: 2022-12-24 11:05 GMT

பொது இடத்தில் குந்தகம் விளைவித்த காரணத்திற்காக ஆபாச youtube சேனலை சேர்ந்தவரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் மாணவ, மாணவிகளின் மனதை கெடுக்கும் வகையில் ஆபாசமாக கேள்வி கேட்டு அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்து வந்ததாக பெண் யூடூபரை பிடித்து வழக்கறிஞர் ஒருவர் போலீசாரிடம் ஒப்படைத்தார். மிகவும் அருவருக்கத்தக்க கேள்விகளை மாணவ, மாணவிகளிடம் கூச்சம் ஏற்படுத்தும் வகையில் கேட்டு அதனை யூட்யூபில் பதிவு செய்து வருவதாக 'வீரா டால்க்ஸ்' என்ற youtube சேனல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் மைக் உடன் சுற்றிய வர்ணரையாளரையும் இளம் பெண்களையும் படம்பிடித்த கேமராமனை மடக்கிய வழக்கறிஞர் ஒருவர் போலீசுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் கேள்வி கேட்டு பிராங்க் செய்து அதனை வீடியோ பதிவு செய்து யூட்யூபில் பதிவிடுவதாகும் புகார் தெரிவித்தார்.

உடனே விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் இருந்த கேமராவை பரிந்துரை செய்ததோடு இருவரையும் காவல் நிலையம் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரித்த காவல்துறையினர் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளனர்.


Source - Polimer News

Similar News