கோவில் திருவிழாவிற்கு காவல்துறை அனுமதி தேவை இல்லை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு

கோவில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற அவசியம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.

Update: 2022-08-16 13:41 GMT

கோவில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற அவசியம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வளையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோவில் திருவிழாவிற்கு அனுமதி கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சீனு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது வழக்கை விசாரித்து நீதிபதி கிராமங்களில் கோவில் திருவிழா தொடர்பாக நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் கோயில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருந்தாலும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதுமானது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


Source - News 7 Tamil

Similar News