இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேச்சு: நடிகர் விஜய்க்கு வைகைச்செல்வன் சுட..சுட.. நெருப்படி பதில்!!

இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேச்சு: நடிகர் விஜய்க்கு வைகைச்செல்வன் சுட..சுட.. நெருப்படி பதில்!!

Update: 2019-09-20 10:42 GMT

சென்னையில் நேற்று 'பிகில்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார். , அப்போது அவர் "பேனர் விழுந்த விபத்தில் மரணம் அடைந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்அனுதாபங்கள். இது போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு  ஹேஷ்டேக் பதிடுங்கள் . சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். இங்கு யாரை ப் பிடித்து கைது செய்ய வேண்டுமோ, அவர்களைபிடிப்பதில்லை . போஸ்டர் பிரிண்ட் செய்தவர்களை கைது செய்கிறார்கள்," என்று பேசினார்.


நடிகர் விஜயின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், "தற்போது திரைப்படங்கள் 20 நாட்கள் ஓடுவதே கடினமாக உள்ளது இந்த நிலையில், திரைப்படங்களைப் பரபரப்புக்குள்ளாக்குவதும் அதேசமயத்தில் அப்படத்தின் பெயரை மக்களிடையே கொண்டு செல்வதற்கும், பரபரப்பு மிக்க அரசியல் தேவைப்படுகிறது.


ஒரு காலத்தில் நல்ல கதையை நம்பி படம் எடுத்தார்கள். கதையின் பலமான கட்டமைப்பால், திரைப்படம் நீண்ட நாட்களுக்கு,  கிட்டத்தட்ட ஓராண்டுக்கெல்லாம் ஓடியிருக்கிறது. தற்போது கதையே இல்லமல் படத்தை எடுத்து எப்படியாவது ஓரிரு மாதங்களுக்கு ஓட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புக்கு உண்டாக்குகின்றனர் .


எனவேதான் இசை வெளியீட்டு விழாவில் அரசியலைப் பேசி அதன் மூலமாக தங்களுடைய படத்தை ஓட்டுவதற்காக அரசியல் செய்து வருகின்றனர். அவற்றில் சில நடிகர்கள் உள்ளனர் . அவர்களில் குறிப்பிடத்தக்கவர் விஜய். அவர் படங்கள் அப்படித்தான் ஓடுகின்றன.


சுபஸ்ரீ விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்திருக்கிறது. யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர் குறிப்பிட்டிருக்கிறார். எங்கு யாரை வைக்க வேண்டுமோ அங்குதான் நம் மக்கள் வைத்துள்ளனர் எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் இன்ட்றைக்கு எடப்பாடி, பன்னீர்செல்வம் வரை மக்கள் வெற்றியைத் தந்திருக்கின்றனர். அதிமுக ஆட்சி தொடர்ந்து ஆட்சியில்தான் இருக்கிறது". இவ்வாறு வைகைச்செல்வன் கூறினார் .


https://www.hindutamil.in/news/tamilnadu/516504-vaikaiselvan-condemns-actor-vijay-s-speec-in-bigil-audio-launch.html


Similar News