நீட் தேர்வு உள்பட அனைத்து நுழைவு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு..

நீட் தேர்வு உள்பட அனைத்து நுழைவு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு..

Update: 2020-04-07 14:04 GMT

சீனாவில் வூஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் இதுவரை 76 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பரவி 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீட் உள்பட அனைத்து நுழைவுத் தேர்வுகள் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனைப்பற்றி டெல்லி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நிருபர்களிடம் கூறியது: ஜே.என்.யு., யு.ஜி.சி. நெட், இக்னோ பி.எச்.டி. இந்த பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு உள்பட அனைத்து நுழைவு தேர்வுகளும் தற்போது தள்ளிவைக்கப்படுகிறது என கூறினார்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2516863

Similar News