'எப்பொழுதும் தமிழ் மொழியை புகழ்கிறார் பிரதமர் மோடி' - ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய தகவல்

உலகின் பழமையான மொழி தமிழ் மொழி என பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-16 13:15 GMT

உலகின் பழமையான மொழி தமிழ் மொழி என பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


சென்னை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழா இன்று காலை சென்னை காமராஜர் சாலையில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, 'உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார். தமிழ் மொழியின் இலக்கணமும், இலக்கியமும் பாரம்பரியமிக்க தொன்மை வாய்ந்தது. கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர் என்பது தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது பெருமையாக இருக்கிறது' என்றார்.

மேலும் பேசிய அவர், 'தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வரவேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் புகழை மீட்டெடுக்க வேண்டும், தமிழ்நாடு தமிழ்மொழி நாடு முழுவதும் பரப்ப பட வேண்டும்' எனவும் ஆர்.என்.ரவி இன்று பேசினார்.


Source - Junior விகடன்

படம் - ANI

Similar News