இந்தியா வேகமாக நகரமயமாகி வருவதால் உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம் - பிரதமர் மோடி!

இந்தியா வேகமாகி நகரமயமாகி வருவதால் எதிர்காலத்துக்கு ஏற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2023-03-02 10:15 GMT

நகர்ப்புற திட்டமிடல் வளர்ச்சி மற்றும் துப்புரவு என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தையை இணைய வழி கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-


நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள் தான் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். நன்கு திட்டமிடப்பட்ட 75 நகரங்கள் சுதந்திரமடைந்ததிலிருந்து மேம்படுத்தப்பட்டிருந்தால் உலக அரங்கில் இந்தியாவின் இடம் முற்றிலும் வேறாக இருந்திருக்கும் .ஆனால் ஒன்று இரண்டு நகரங்கள் மட்டுமே மேம்படுத்தப்பட்டன . இந்தியா வேகமாக நகரமாகி வருகிறது .எனவே எதிர்காலத்துக்கு ஏற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம். நகர்ப்புற திட்டமிடல் அமிர்த காலத்தில் நமது நகரங்களின் தலைவிதையை தீர்மானிக்கும். திட்டமிடல் சிறப்பாக இருக்கும் போது நமது நகரங்கள் பருவநிலைக்கு ஏற்ப நெகிழ்து கொடுக்க கூடியதாக இருக்கும். நகர்ப்புற வளர்ச்சியின் தலைப்புக்காக இந்த பட்ஜெட்டில் ரூபாய் 15,000 கோடி ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்ட நகரமயமாக்கலுக்கு ஊக்கம் அளிக்கும். நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தேவையாக உள்ளது.


நகர்ப்புற வளர்ச்சிக்கு புதிய நகரங்களை உருவாக்குதல் ,தற்போதைய நகரங்களின் சேவைகளை நவீனப்படுத்துதல் ஆகியவை இரண்டும் முக்கிய அம்சங்கள் ஆகும். அதனால்தான் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நகர்ப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நகரங்களின் மோசமான திட்டமிடல் முறையாக அமல்படுத்தப்படாதது ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி பயணத்துக்கு சவால்களாக அமைந்துள்ளன. தொழிற்சாலைகள் கழிவு மேலாண்மையில் தீவிரம் காட்ட வேண்டும் .சில நகரங்களில் பயன்படுத்திய தண்ணீர் மறு சுழற்சி செய்யப்பட்டு தொழிற்சாலை பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நமது நகரங்கள் குப்பை இன்றி இருக்க வேண்டும். நகர்ப்புற உள்கட்டமைப்பில் முதலீடு அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற திட்டமிடலின் ஒரு அங்கமாக மைதானங்களும் குழந்தைகளுக்கான சைக்கிள் பாதையும் உருவாக்கப்பட வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்.



 


Similar News