மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமங்கள் அனுபவிக்காத வகையில் உதவியது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த பத்தாண்டு கால சாதனைகளே அதற்கு சாட்சி .ஏழை எளியோர்களுக்காகவும் இயலாதவர்களுக்காகவும் அதிக அளவில் கருணை மனப்பான்மையோடு நடந்து கொள்ளக் கூடியவர், பெருந்தன்மை மிக்கவர், மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் தெலுங்கானாவில் ஒரு நிகழ்வு.
தெலுங்கானாவின் மகபூப் நகரில் பாஜக பிரச்சார கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது .பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பெருந்திரளானோர் கூடினர். அப்போது சக்கர நாற்காலியில் வந்த இரு மாற்றுத்திறனாளி பெண்கள் கூட்டத்தின் நடுவில் சிக்கித் தவிப்பதை பிரதமர் மோடி மேடையில் இருந்து பார்த்தார். உடனே தனது உரையை நிறுத்தி "அவர் மாற்றுத்திறனாளிகள் அவதிப்படக்கூடாது அவர்களுக்கு இடம் விடுங்கள். அவர்கள் முன் வரிசையில் அமர ஏற்பாடு செய்யுங்கள்" என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை ஒருவர் கையில் தூக்கி சென்றார் .மற்றொரு பெண்ணை நாற்காலியோடு சேர்த்து தூக்கி முன் வரிசைக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் புன்னகையோடு கையசைத்து பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
SOURCE :Dinaseithi