மூன்று கட்ட அணு ஆற்றல் திட்டத்தின் ஒரு பகுதியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-05 09:13 GMT

சென்னை நந்தனத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் நேற்று மாலை தனி விமானம் மூலமாக சென்னை வந்தார். பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அவர் கல்பாக்கம் சென்றார். கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் பாவினி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட 500 மெகாவாட் வேக ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் .ஈனுலை என்று சொல்லக்கூடிய புதிதாக இந்திய அரசின் மூன்று கட்ட அணு ஆற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்பாக்கத்தில் நாட்டிலேயே முதல் முறை அமைக்கப்பட்டுள்ள பாவினி அணுமின் நிறுவனத்தின் புதிய கட்டுமானத்தை பார்வையிட்டார்.


அப்போது ஈனுலையின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளிடம் அவர் ஆர்வமாக கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். மூன்று மூலப்பொருள்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் .அதில் யுரேனியம் 235 என்பது இயற்கையாகவே பூமியிலிருந்து பெறப்படும் யுரேனியம் ஆகும். அந்த யுரேனியத்தின் மூலமாகத்தான் அணுமின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் .பூமிக்கடியில் இருந்து பெறக்கூடிய ஒட்டுமொத்த யுரேனியத்தின் ஒட்டுமொத்த மூலத்தில் 0.7 சதவீதம் அளவுக்கு தான் யுரேனியம் 235 இருக்கும்.


எனவே மின்சார உற்பத்தியை கூடுதலாக அறிவிக்க வேண்டும் என்றால் அனுமின் நிலையங்களில் தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய இயற்கையான யுரேனியம் மட்டும் போதாது. அதற்கு மாறாக யுரேனியம் 233 வகையை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசு உருவாக்கி இருக்கக்கூடிய மூன்று கட்ட அணு ஆற்றல் திட்டம். யுரேனியம் 235 யை உருவாக்கும் போது அதிலிருந்து கிடைக்கக்கூடிய ப்ளூட்டோனியம் மற்றும் தாது மணல் கலவையையும் இணைத்து உருவாக்கக்கூடியது தான் 'யுரேனியம் 233'. இதன் மூலம் மின்சாரத்தை உருவாக்கக்கூடிய திட்டம் தான் ஈனுலை திட்டம் இந்த திட்டத்தின் கோர் லோடிங் என்று சொல்லக்கூடிய மைய செயல்பாட்டு பகுதியை தான் பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டுள்ளார் இந்த திட்ட கட்டுமானத்துக்காக 2004-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது தான் அந்த பணிகள் முழுமை பெற்றுள்ளது.


இதன் மூலம் அணுக்கரு வழியாக இன்னும் 400 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் மூலமாக குறைவான அணுக்கரு மூலமாக மிகை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குரு, சிறு நிறுவனங்கள் உட்பட 200 நிறுவனங்களின் பங்களிப்புடன் பாவினி நிறுவனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக யுரேனியம் 233 மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை இந்தியா தற்போது முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


SOURCE :DAILY THANTHI

Similar News