காஞ்சிபுரம் விவசாயி எழிலனை மன் கீ பாத் நிகழ்ச்சியில் வானுயர புகழ்ந்த பிரதமர் மோடி - அவர் செய்த சாதனை தெரியுமா?

சோலார் பம்பு செட் அமைத்த காஞ்சிபுரம் விவசாயியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

Update: 2022-10-30 13:13 GMT

சோலார் பம்பு செட் அமைத்த காஞ்சிபுரம் விவசாயியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கீபாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். இந்நிலையில் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது, 'இன்று நாம் மிகப்பெரிய சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டோம். நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை சோலார் எரிசக்தி எவ்வாறு மாற்றுகிறது என்பதும் அது பொருளாகும்.

சோலார் சக்தி மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும், தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்ற விவசாயி பிரதமர் குஷும் யோஜனா கீழ் பயனடைந்துள்ளார். அவரது பண்ணையில் 10 குதிரை திறன் கொண்ட சோலார் பம்ப் சேட்டை அமைத்துள்ளார். இதன் மூலம் அவரது விவசாயத்துக்கு என எதுவும் செலவு செய்தது கிடையாது.

விவசாய நிலத்தில் பாசனம் செய்து வரும் அவர் அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை' என பேசினார். இவ்வாறு நிகழ்ச்சியில் ஓர் தமிழக விவசாயியை ஒருவரை பிரதமர் பாராட்டி பேசிய விவகாரம் அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Source - Maalai malar

Similar News