நாக்பூரில் நாளை இந்திய அறிவியல் மாநாடு தொடக்கம் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

நாக்பூரில் நாளை இந்திய அறிவியல் மாநாடு தொடங்க இருக்கிறது. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

Update: 2023-01-02 06:45 GMT

இந்திய அறிவியல் மாநாடு கடந்த 1914 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த வரிசையில் 108 வது மாநாடு நாக்பூரில் உள்ள ஆர்.டி. எம் பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்கி ஏழாம் தேதி வரை நடக்கிறது. 'பெண்களுக்கு அதிகாரமளித்தலுடன் கூடிய நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்' என்ற கருப்பொருளில் நடைபெறும். இந்த மாநாட்டில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையின் உயர்மட்டங்களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளும் புகழ் பெற்ற பெண் விஞ்ஞானிகளின் விரிவுரைகளும் மாநாட்டில் இடம்பெறும். குழந்தைகள் அறிவியல் மாநாடு, விவசாயிகள் அறிவியல் மாநாடு, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி நாளை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்த தகவல்களை பிரதமர் அலுவலகம் செய்து குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.





 


Similar News