இந்தியா வளர்ந்த நாடாக மாற பிரதமர் மோடியின் கரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் - ஜே.பி நட்டா!
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.
இந்தியா வளர்ந்தநாடாக உருவெடுக்க பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தேர்தல் பிரச்சாரத்தின் போது கேட்டுக் கொண்டார். ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது :-
எதிர்க்கட்சிகள் கைகோர்த்து இருப்பது நாட்டின் ஒட்டுமொத்த ஊழலும் ஒன்றுகூடி இருப்பதை நம் கண் முன் நிறுத்துகிறது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பது பிரதமர் மோடியின் பிரதான நோக்கமாக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஊழல்களில் திளைக்கும் கட்சிகளாக உள்ளன. காங்கிரஸ் திமுக ராஷ்ட்ரிய ஜனதா தளம் , தேசிய மாநாட்டு கட்சி ,திரிணாமுல் காங்கிரஸ் என அனைத்து கட்சிகளுமே ஊழலில் நிபுணத்துவம் பெற்றவையாக உள்ளன. இக்கட்சித் தலைவர்களில் பெரும்பாலான சிறையில் உள்ளனர் அல்லது ஜாமினில் வெளியே உள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மக்களை பற்றி எந்த அக்கறையும் கிடையாது. தங்கள் வாரிசுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். அவர்களே முதல்வராக வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக உள்ளது .அதே நேரத்தில் இந்தியா வளர்ந்த நாடுகள் பட்டியலில் இணைய வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயத்து உள்ள இலக்காகும் .இதனை அடைய அனைத்து தரப்பினரும் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.