ராணுவத்தைப் பற்றி திரைப்படம் எடுக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்! அதிரடி முடிவு.!

ராணுவத்தைப் பற்றி திரைப்படம் எடுக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்! அதிரடி முடிவு.!

Update: 2020-08-01 15:30 GMT

ஒரு வெப் சீரிஸில் ராணுவத்தைப் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து ராணுவத்தை பற்றி படம், நாடகம், வெப் சீரிஸ் ஆகியவற்றை எடுப்பதற்கு முன் மத்திய பாதுகாப்பு துறையின் அனுமதி பெற வேண்டும் என்று என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனங்களை‌ எச்சரிக்குமாறு மத்திய சென்சார் போர்டுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ சீருடையை இழிவு படுத்தும் வகையில் சில வெப் சீரிஸ்களில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உண்மை நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மோசமான விதத்தில் இராணுவமும் இராணுவ வீரர்களும் சித்தரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், நாடகங்கள், ஆவணப் படங்கள், வெப் சீரிஸ்கள்‌ என அனைத்திற்கும் ஒளிபரப்பப்படும் முன் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு சென்சார் போர்டுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவைப் பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மற்றும் மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது.

Similar News