கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு - ஆம்புலன்சை சூறையாடிய கும்பல்.!

கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு - ஆம்புலன்சை சூறையாடிய கும்பல்.!

Update: 2020-04-20 11:31 GMT

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரண்டு மருத்துவமனனகளின் நிர்வாக இயக்குநரான 55 வயது மதிக்கத்தக்க நரம்பியல் நிபுணர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை புதைப்பதற்காக வேளங்காடு மயானத்துக்கு ஆம்புலன்ஸ்-ல் கொண்டு வந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படவரின் உடலை இங்கே புதைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கற்கள், கம்பு ஆகியவற்றுடன் வந்து ஆம்புலன்ஸை சூறையாடி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உட்பட 2 பேரை தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த ஆனந்த், தாமோதரன் ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள விஷமிகள் சிலர் ஆம்புலன்சை கற்களைக் கொண்டு தாக்கி உள்ளனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தினர் பின்னர் மருத்துவரின் உடலை அடக்கம் செய்தனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பணியாளரை தாக்கியதாக தற்போது வரை அண்ணாநகர் போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர். இறந்தவரின் உடல் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவது என்று பல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

Similar News