'ப்ளீச்சிங் பவுடர் போட்டு நல்லா சுத்தம் பண்ணு' - மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை

பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-12-02 03:02 GMT

பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக தலைமை ஆசிரியை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாலக்கரையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதாராணி மாணவர்களை தினமும் கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது, மாணவர்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய சொல்வதால் சிறுவர்களின் கை மற்றும் கால்களில் கொப்பளம் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர்கள் இது குறித்து விசாரணை செய்து பின்னர் தலைமை ஆசிரியையை பணி இடைநீக்கம் செய்தனர்.



Source - Polimer News 

Similar News