பிரதமர் மோடி அரசை விமர்சித்து வந்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ராகுல் காந்தியின் ஆலோசகராக மாறினார்: பி.சிதம்பரத்தின் ஏற்பாட்டின் பேரில் இருவரும் அடிக்கடி சந்திக்கும் ரகசியம் அம்பலம் !

பிரதமர் மோடி அரசை விமர்சித்து வந்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ராகுல் காந்தியின் ஆலோசகராக மாறினார்: பி.சிதம்பரத்தின் ஏற்பாட்டின் பேரில் இருவரும் அடிக்கடி சந்திக்கும் ரகசியம் அம்பலம் !

Update: 2019-01-17 16:57 GMT
பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துகள் கூறி வந்த ரகுராம் ராஜன், ராகுலுக்கு பல்வேறு விஷயங்களில் உதவி வருவதாக கூறப்படுகிறது. பொருளாதாரம் தொடர்பாகத் தான் பேச நினைத்த சில விஷயங்களையும் ராகுலுக்கு யோசனையாக கூறி வருகிறார் என்றும் இது தொடர்பாக இருவரும் அடிக்கடி சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
புதிய வேலைவாய்ப்பை உருவாக்க மோடி அரசு தவறிவிட்டார் எனவும்  அந்த விஷயத்தை கையில் எடுக்க நினைத்த ராகு விரும்பினார் என்றும், ல், அதற்கு மாற்றான தீர்வுகள் தொடர்பான யோசனையை பெற்று அதை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்திருப்பதாகவும், மோடி அரசை தாக்குவதற்கு ரகுராம் ராஜனிடம் இருந்து சில ஆலோசனைகளை பெற ராகுல் காந்தி
கடந்த சில நாட்களில் மட்டும் ராகுல், ரகுராம் ராஜனை இருமுறை சந்தித்து பேசி உள்ளதாக காங்., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக, கடந்த வாரம் துபாய் சென்ற போது கூட ராகுல், ரகுராம் ராஜனிடம் பேசி உள்ளார். உண்மையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிவுரையின் பேரிலேயே ராகுல், ரகுராம் ராஜனிடம் பேசி உள்ளார். ரகுராம் ராஜனிடம் ஆலோசிக்கும் விவகாரங்களின் அடிப்படையிலேயே லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் தயார்படுத்தி வருகிறாராம்.  மோடி அரசுக்கு எதிராகவும், அதே சமயம் இளைஞர்களை கவர வேலைவாய்ப்பின்மை பிரச்னையை கையில் எடுப்பதே சரியானதாக இருக்கும் என ராகுல் நினைக்கிறாராம்.
காங்., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவராக உள்ள ப.சிதம்பரம் நிபுணர்கள் பலரிடமும் ஆலோசித்து வருகிறாராம். இவர்களில் ரகுராம் ராஜன், ப.சிதம்பரத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் சிதம்பரம் அளித்த அறிவுரைப்படி ராகுல், ரகுராம் ராஜனிடம் ஆலோசித்து வருகிறாராம். 2012-13 ம் ஆண்டில் ப.சிதம்பரம் தான், ரகுராம் ராஜனை தலைமை பொருளாதார ஆலோசகராகவும், 2013 செப்டம்பரில் ரிசர்வ் வங்கி கவர்னராகவும் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் பிரதமர் மோடி ஆட்சிக்கேற்றவாறு அவர் செயல்படவில்லை என்றும் பாஜகவின் அதிருப்திக்கு ஆளானார் என்றும் கூறப்படுகிறது.
எனவேதான் 2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ரகுராம் ராஜனின் பதவி காலத்தை மோடி அரசு புதுப்பிக்கவில்லை என்றும் இதனால்தான் அதிருப்தியில் மோடி அரசுக்கு எதிராக பேசி வந்த ரகுராம் ராஜன், அமெரிக்கா சென்று சிகாகோவில் உள்ள வர்த்தக கல்லுாரியில் பணியாற்றி வருகிறார் என்றும் கூறப்பட்டது. ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்த மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, அவரது பதவிக்காலம் முடிந்ததும் 2016 நவம்பர் மாதத்தில் கறுப்பு பண ஒழிப்புக்காக பணமதிப்பிழப்பை அறிவித்தது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
( source: dinamalar )

Similar News