அமேதியில் இந்த வேலை முடியுங்கள் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி - "தம்பி அந்த வேலையெல்லாம் எப்பயோ முடிச்சாச்சு போய் பாத்துட்டு கடிதம் எழுதுங்க" என ராகுலை கலாய்த்து தள்ளிய அமைச்சர்!

அமேதியில் இந்த வேலை முடியுங்கள் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி - "தம்பி அந்த வேலையெல்லாம் எப்பயோ முடிச்சாச்சு போய் பாத்துட்டு கடிதம் எழுதுங்க" என ராகுலை கலாய்த்து தள்ளிய அமைச்சர்!

Update: 2018-11-19 07:30 GMT
ஆகஸ்ட் 30-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். தனது தொகுதியான அமேதியில் ரயில்வே சார்ந்த வேலைகள் மிக மெதுவாக நடப்பதாகவும், அந்த வேலைகளை துரிதப்படுத்தும் மாறும் கேட்டுக்கொண்டார். ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், ரயில் பாதையை இரட்டிப்பாக்கம், மின்சாரமயமாக்கல், பாலம் கட்டுமானம் போன்ற 10 வேலைகளை கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
இதற்கு அக்டோபர் 18 தேதியிட்ட பதிலில் கோயல் கூறியிருப்பது: பயணிகள் வசதிகளுடன் தொடர்புடைய வேலைகள் முடிந்துவிட்டன. உள்கட்டமைப்பு தொடர்பான வேலைகள் துரிதமாக கண்காணிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். தனது ஐந்து பக்க பதிலில், ரயில் நிலையத்தை ஒரு முறையாவது சென்று பார்த்துவிட்டு குற்றசாட்டை முன்வைக்கலாம் என்று குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளபடி, 2013-14-ஆம் ஆண்டிற்கான பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது, முன்னரே முடிவடைந்து விட்டது. இன்னும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று ரயில்வே அமைச்சரின் கடிதம் தெரிவித்துள்ளது. ரேபரேலில்-அமேதி, இடையேயான பாதை இரட்டிப்பு வேலை, 2014-க்கு முந்தைய UPA அரசாங்கத்தின் கீழ் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறியுள்ளார். 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ஸ்-ராய்பரேலி பிரிவு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பல வேலைகள் முன்னரே முடிவடைந்தது. அதை சரிபார்க்காமல் வேண்டுமென்றே குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காக இந்த கடிதத்தை எழுதியுள்ளார். 3 முறை அமேதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகுல் காந்தி, பல வருடங்களாக அமேதி ராகுல் காந்தியின் குடும்பத்திடம் தான் இருந்தது. ஆட்சியிலும் அவர் கட்சி தான் இருந்தது. இந்த அடிப்படை வசதிகளை கூட ராகுல் காந்தி தனது தொகுதிக்கு செய்து தரவில்லை. அப்படி இருக்கையில் இவர் எப்படி இந்தியாவை காப்பாற்றுவார் என கலாய்த்து தள்ளுகின்றனர் இணையவாசிகள்.

Similar News