மாநிலங்களவை சீட் எனக்கே எனக்குத்தான் .. மதிமுகவுக்கு கிடையாது !! உடும்பு பிடி பிடிக்கும் வைகோ !!

மாநிலங்களவை சீட் எனக்கே எனக்குத்தான் .. மதிமுகவுக்கு கிடையாது !! உடும்பு பிடி பிடிக்கும் வைகோ !!

Update: 2019-07-08 13:42 GMT


திமுக சார்பில் மாநிலங்களவை சீட் எனக்குதான் ஒதுக்கப்பட்டது; மதிமுகவுக்கு இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 


தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவி காலம் வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திமுக சார்பில் வேட்பாளர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர்.


இந்த நிலையில், வைகோ மீது எத்தனையோ அரசியல் வழக்குகள் தொடரப்பட்டாலும் தேசதுரோக வழக்கில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தீர்ப்பை ஒரு மாதத்திற்கு நீதிமன்றம் நிறுத்திவைத்திருந்தாலும், மனுவை ஏற்பார்களா என்பது குறித்து தெளிவான தகவல்கள் தெரியாத நிலையில், வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதையடுத்து மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோவை வேட்புமனு தாக்கல் செய்யுமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து என்.ஆர். இளங்கோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னுடைய வேட்புமனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். நாளை செவ்வாய்கிழமை நடைபெறும் (ஜூலை 9) பரிசீலனையின் போதுதான், மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது தெரியும். அதுவரை தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.


மேலும் நான் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்பதே ஸ்டாலினின் விருப்பம். நான் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதாக இருந்தால் சீட் ஒதுக்கீடு செய்வதாக ஒப்பந்தத்தின்போது ஸ்டாலின் கூறினார். நான் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், மாற்று ஏற்பாட்டை செய்யுமாறு ஸ்டாலினை சந்தித்து நான் வலியுறுத்தினேன். நான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாற்று வேட்பாளர்தான் மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ என விளக்கம் அளித்த வைகோ, நான் மாநிலங்களவைக்கு செல்லவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.


தான் மாநிலங்களவைக்கு செல்லக் கூடாது என யாரும் சதி செய்வதாக நினைக்கவில்லை என்றும், வேட்பு மனு பரிசீலனை இருப்பதால், எதுவும் சொல்ல விரும்பவில்லை. தேச துரோக வழக்கில் எனக்கு தண்டனை கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால்தான் தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால் எனது வேட்பு மனு ஏற்று கொள்ளப்படும் என நம்புகிறேன். எனது வேட்புமனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றா வைகோ.


மேலும் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக செல்வதால் நாளை வேட்புமனு பரிசீலனைக்கு எனது சார்பில் மாற்று வேட்பாளர் என்.ஆர். இளங்கோ செல்வார். எனது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் இளங்கோ தனது மனுவை திரும்ப பெறுவார் என கூறினார். 


Similar News