அயோத்தியை எதிர்த்து வழக்கு தொடந்த அன்சாரியும் நாளை பூமி பூஜையில் பங்கேற்கிறார் - "இது ராமபிரானின் விருப்பம்" என புகழாரம்.! #Rammandhir #Ansari

அயோத்தியை எதிர்த்து வழக்கு தொடந்த அன்சாரியும் நாளை பூமி பூஜையில் பங்கேற்கிறார் - "இது ராமபிரானின் விருப்பம்" என புகழாரம்.! #Rammandhir #Ansari

Update: 2020-08-04 02:45 GMT

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமபிரானின்  நிலத்தின் மீது உரிமை கோரி அதன் தொடர்பாக வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கும் நாளைய பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அதை ஏற்று அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாக கூறியுள்ளார் இது குறித்து அவர் கூறுகையில், 'பூமி பூஜைக்காக எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. கண்டிப்பாக நான் இதில் பங்கேற்பேன். இது ராமபிரானின் விருப்பம் என நினைக்கிறேன். கோர்ட்டு தீர்ப்பால் சர்ச்சை எல்லாம் ஓய்ந்து விட்டது. சாதுக்கள் மற்றும் சாமியார்களை நான் மதிக்கிறேன்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, 'நமது பிரதமர் விழாவுக்கு வருகிறார். அவரை நான் சந்தித்து ராமபிரான் பெயர் பொறித்த துண்டு உள்ளிட்டவற்றை அவருக்கு பரிசளிப்பேன்' என்று கூறினார்

இக்பால் அன்சாரியின் தந்தையான ஹாசிம் அன்சாரிதான் ராமஜென்மபூமி தொடர்பாக முதன் முதலில் வழக்கு தொடர்ந்தவர்களில் முக்கியமானவர். அவர் கடந்த 2016-ம் ஆண்டு இறந்தபிறகு, இந்த வழக்கை இக்பால் அன்சாரி தொடர்ந்து நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

Similar News