'ரா' உளவு அமைப்பின் தலைவராக தலைவராக ரவி சின்கா நியமனம்

வெளிநாட்டில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்பின் தலைவராக ரவி சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-06-20 05:30 GMT

வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்பு 'ரா'. அதன் தலைவராக உள்ள சமந்த்கு மார்கோயல், இம்மாதம் முப்பதாம் தேதி ஓய்வு பெறுகிறார். அதை அடுத்து 'ரா' அமைப்பின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ரவி சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். அவரை இரண்டு ஆண்டுகளுக்கு அப்பதவியில் நியமிக்க மத்திய மந்திரி சபையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் அளித்தது.


தற்போது மந்திரி சபை செயலகத்தின் சிறப்பு செயலாளராக இருந்து வருகிறார். அவர் 1988 ஆம் ஆண்டின் சதீஷ்கார் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார் 20 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சில வெளிநாடுகளில் சீக்கிய பயங்கரவாதம் தலைதூக்கி வரும் வேலையில் ரவி சின்கா இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

Similar News