பே.டி.எம் நிறுவனத்துக்கு கோடி கணக்கில் அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி - காரணம் என்ன?

பே.டி.எம் நிறுவனத்துக்கு ரூபாய் ஐந்தே கால் கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Update: 2023-10-13 06:15 GMT

பண பரிவர்த்தனைகளை எளிதாக ஆன்லைன் வழியாக செலுத்த உதவும் பிரபல நிறுவனம் பேடிஎம்.இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி என்ற விதிமுறைக்கு பேடிஎம் நிறுவனம் இணங்கவில்லை என்பதால் அந்த நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி ரூபாய் 5.39 கோடி அபராதம் விதித்துள்ளது. பேடிஎம் நிறுவன வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி மற்றும் பண மோசடி எதிர்ப்பு ஆகியவை குறித்து ரிசர்வ் வங்கி ஒரு சிறப்பு ஆய்வு நடத்தியது.


மேலும் தணிக்கையாளர்களால் வங்கியின் விரிவான அமைப்பு தணிக்கை செய்யப்பட்டது .இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி பே.டி.எம் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News