காப்பு காடுகள் வேறு வனப்பகுதி வேறு - குவாரிகள் அமைக்க தமிழக அரசு கொடுக்கும் புது விளக்கம் என்ன?
காப்புக் காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் சுரங்கம் மற்றும் அகழாய்வு பணிகள் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஏன் என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
காப்புக் காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் சுரங்கம் மற்றும் அகழாய்வு பணிகள் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஏன் என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தொழில்துறையின் 2021-22 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது குவாரி பணிகளில் இருந்து வரலாற்று சின்னங்கள் கல்வெட்டுகள் சமணப் படுகை மற்றும் தளங்கள் பாதுகாக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். அதன்படி சிறு கனிம சலுகை விதிகளில் புதிய விதி விதிக்கப்பட்டது.
இதில் தேசிய பூங்கா, வனவிலங்கு, சரணாலயங்கள், காப்பகங்கள், யானை வழித்தடங்கள், காப்பு காடுகள் போன்ற பகுதிகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் குவாரி மற்றும் சுரங்கங்கள் செயல்படுவது தடுக்கப்பட்டது. இதன் காரணமாக கைவினை கலைஞர்கள் மண்பாண்ட தொழிலாளர்கள் சிற்பிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் என அந்த தடையை நீக்க கூறினார்கள் கடந்த ஏப்ரல் 19 அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் பேசும்போது காப்புக்காடுகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு கோரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் நடைமுறை சிக்கல்கள் உருவாகின எனவும் கூறினார்.
அதனை தொடர்ந்து அரசாணையில் குறிப்பிடப்பட்ட காப்புக்காடுகள் தொடர்பான விதி நீக்கம் செய்யப்பட்டது. எனினும் தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் ஆகியவற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் குவாரி பணிகளை தடை தற்போது நீடிக்கிறது. பாதுகாக்கப்பட்ட காடுகள் என்பதன் பொருள் சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அதை காப்புக்காடுகள் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு சார்பில். இதன்மூலம் மண் மற்றும் பாறைகள் எடுக்கப்படும் இடங்களை மாற்றி அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.