குமரமலை முருகன் கோவிலில் கொள்ளை முயற்சி - மர்மநபர்கள் அட்டகாசம்

குமரமலை முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Update: 2022-10-12 08:56 GMT

குமரமலை முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அமைந்துள்ள குமரமலை முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கும் முயன்ற நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன. இங்கு வைக்கப்பட்டு இரண்டு உண்டியல்களில் ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை முயற்சியில் உண்டியலில் இருந்த பணம் மற்றும் நாணயங்கள் கோவில் முழுவதும் சிதறி கிடந்தன. கோவில் நகைகள் திருடு போய்விட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Source - Polimer News

Similar News