ரபேல் பிரச்சனையே அல்ல.. ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வாத்ராவுக்காக பிரச்சனையாக்கப்பட்டது: தீட்டிய சர்வதேச சதி?

ரபேல் பிரச்சனையே அல்ல.. ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வாத்ராவுக்காக பிரச்சனையாக்கப்பட்டது: தீட்டிய சர்வதேச சதி?

Update: 2018-09-25 11:47 GMT

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்திய அரசு வழங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.


இதையடுத்த பிரான்ஸ் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "ரபேல் ஒப்ந்த விவகாரத்தில் இந்தியாவில் எந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவில் பிரான்ஸ் அரசு எடுக்கவில்லை. இது பிரான்ஸ் வர்த்தக நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமை. அதில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், தரமான போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் மட்டுமே பிரான்ஸ் அரசு உறுதியாக இருந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு பிறகும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடி வருகிறார். இந்நிலையில், ரபேல் ஒப்பந்தத்தை சீர்குலைப்பதற்காக ராகுல் காந்தி சர்வதேச சதியில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆயுத வியாபார ஏஜெண்டான சஞ்சய் பண்டாரிக்கும் ராபர்ட் வாத்ராவுக்கும் தொடர்பு இருந்ததாகவும், பாதுகாப்பு கொள்முதல் விவகாரங்களில் இடைத்தரகர்களாக செயல்பட முயன்ற அவர்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கூறியுள்ளார்.


எனவே ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வாத்ராவின் நிறுவனத்தை பிரான்சின் டசால்ட் நிறுவனம் இடைத்தரகராக ஏற்க வேண்டும் என, அப்போதைய காங்கிரஸ் அரசு விரும்பியதாகவும், ஆனால் அது நடக்காததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ராபர்ட் வாத்ரா தொடர்புடைய நிறுவனம் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இப்போதும் ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என ராகுல் காந்தி விரும்புவதாகவும் கஜேந்திர ஷெகாவத் புகார் கூறியுள்ளார்.

Similar News