கேரளாவில் லட்சக்கணக்கானோர் பங்கு பெற்ற போராட்டம் : வெடித்தது சபரிமலை புரட்சி #SaveSabarimala

கேரளாவில் லட்சக்கணக்கானோர் பங்கு பெற்ற போராட்டம் : வெடித்தது சபரிமலை புரட்சி #SaveSabarimala

Update: 2018-10-02 18:04 GMT
சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கேரளாவில் பொது மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. நாடெங்கும் இந்துக்களின் மத நம்பிக்கையை காக்கும் வகையில் பெரிய புரட்சியாக உருவெடுத்துள்ளது சபரிமலை விவகாரம். கேரள மாநிலம் பந்தலத்தில் நேற்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை பந்தலம் ராஜ குடும்பத்தினர் வழி நடத்தினர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, ஐயப்பன் சுவாமிக்கு அளித்த வாக்குறுதியை அழிப்பதாக இருக்கிறது என்று கூறினர்.
https://twitter.com/Kuvalayamala/status/1046952876327755779?s=19
பல்வேறு இந்துக் குழுக்கள் போராட்டங்களில் பங்கு பெற்று வருகின்றன. ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட, தாந்த்ரீகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தர்ம இயக்கத்திற்கான மக்கள் உறுப்பினர்கள், #ReadyToWait பிரச்சார உறுப்பினர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
https://twitter.com/Kuvalayamala/status/1047065622704730113?s=19
https://twitter.com/HKupdate/status/1047064995585019906?s=19
மத பழக்க வழக்கங்களை எதிர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கருதுகின்றனர்.
பொது மக்கள் உணர்வுகள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக உள்ளது. அதோடு போராட்டம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது. முந்தைய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டம் இது.
https://twitter.com/krithikasivasw/status/1046610779649191937?s=19
உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மையான தீர்ப்புக்கு பதிலாக ஒரே ஒரு பெண் நீதிபதி மாற்று தீர்ப்பு வழங்கினார். நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனது தீர்ப்பில், "மத ரீதியாக உள்ள நம்பிக்கைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். சம உரிமை என்பதுடன் மத ரீதியான பழக்கங்களை தொடர்பு படுத்த கூடாது. மத ரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும்", என்று ஆணித்தரமாக மத வழிபாட்டிற்கு முழு சுதந்திரம் அளித்து தீர்ப்பளித்துள்ளார்.
Based on a OpIndia story

Similar News