115 நாடுகளில் இருந்து புனித நீர் இந்தியா வந்தது- எதற்கு தெரியுமா ?

Breaking News.

Update: 2021-09-19 07:35 GMT

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பயன்படுத்த 115 நாடுகளில் உள்ள முக்கியமான நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கொடுக்கப்பட்டுள்ளது.



அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் நடைபெற்ற போது உலகில் உள்ள பல புனித நதிகளில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதை தற்போதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக உலகில் உள்ள 115 நாடுகளில் உள்ள முக்கிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீர் ஒரு குடுவையில் அடைத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

அதனைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் "உலகமே ஒரு குடும்பம் என்பதை உணர்த்துவதாக இந்த செயல் அமைந்துள்ளது" என்று தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற இந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு 2019ஆம் ஆண்டு தீர்வு கிடைத்தது. உச்சநீதிமன்றத்தால் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த ராமர் கோவிலில் ஒரு பகுதி 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்றும் 2025ம் ஆண்டிற்குள் 70 ஏக்கர் கோவில் வளாகம் முற்றிலும் கட்டி முடிக்கப்படும் என்று அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : Polimer News

Tags:    

Similar News