எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது!
எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது கிடைத்துள்ளது.;
நிகழ் ஆண்டுக்கான சாகித் அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது தமிழ் பிரிவில் எழுத்தாளர் கண்ணன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய உலகில் உயரிய விருதாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு இந்த விருது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது .
அதன்படி தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கண்ணன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சாகித்திய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் தலைமையிலான செயற்குழு விருதுகளை அறிவித்தது. ஒவ்வொரு மொழி பிரிவிலும் மூவர் கொண்ட நடுவர் குழு அமைத்து பரிந்துரையின் பெயரில் விருதுக்கான நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எழுதிய' தி பிளாக்ஹில்' என்ற ஆங்கில நாவலை கருங்குன்றம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டது.
இவர் பல்வேறு நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். இதேபோன்று மலையாள பிரிவில் பி.கே ராதாமணி, கன்னடத்தில் கே.கே கங்காதரன், தெலுங்கில் எலநாகா என 24 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது .இந்த விருதானது தாமிரபட்டயம் ரூபாய் 50,000 ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
SOURCE :Dinamani