நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் - சி.ஐ.எஸ்.எப் வீரர்களுடன் பாதுகாப்பு அதிகரிப்பு
நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு மத்திய அரசின் தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு மத்திய அரசின் தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கிய மத்திய உள்துறை அமைச்சரவை ஏற்கனவே முடிவு செய்தது.
இதனை அடுத்து மத்திய அரசின் சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான உத்தரவு கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர் தற்பொழுது உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் முழுவதுமாக விடுவிக்கப்பட்டனர்.