பிரதமரை கேள்வி கேட்குமளவுக்கு பெரியாளா உதயநிதி? மூத்த தலைவர்கள் யாரும் கட்சியில் இல்லையா? தி.மு.க-வை காய்ச்சி எடுக்கும் SG சூர்யா!

பிரதமரை கேள்வி கேட்குமளவுக்கு பெரியாளா உதயநிதி? மூத்த தலைவர்கள் யாரும் கட்சியில் இல்லையா? தி.மு.க-வை காய்ச்சி எடுக்கும் SG சூர்யா!

Update: 2020-06-19 08:32 GMT

 தி.மு.க இளைஞரணி செயலாளரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஆக்ரோஷமாக ட்விட்டரில் பல பதிவுகளை செய்துள்ளார். அதில், இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்து பாரத பிரதமரை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பா.ஜ.க இளைஞரணி துணைத்தலைவர் SG சூர்யா தி.மு.க-வில் பிரதமரை கேள்விக் கேட்கும் தகுதியில் மூத்த தலைவர் யாரும் இல்லாததால் வாரிசு அரசியல்வாதி உதயநிதி கேள்வி கேட்டுள்ளாரா என வினவியுள்ளார்.

மேலும், தனது ட்வீட்டில் "பிரதமரை கேள்வி கேட்கின்றீர் சரி. அதற்கென்று மூத்த தலைவர்களோ, அரசியல் அனுபவம் பெற்றவர்களோ இல்லையா? அரசியல் அரிச்சுவடியே தெரியாமல் நேற்று திடீரென அரசியலில் குதித்த @Udhaystalin குடும்ப வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக தகுதியே இன்றி கேள்வி கேட்பதும், தி.மு.க #PR செய்வதும் கேலிக்கூத்து." என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க-வில் மூத்த தலைவர்கள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டு, கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதி ஸ்டாலின் கடந்த ஒரு வருடமாக முன்னிலை படுத்தப்படுகிறார். இதனால் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என செய்திகள் வரும் வேளையில் பிரதமரை கேள்வி கேட்கும் அதிகாரமும் நேற்று அரசியலில் நுழைந்த உதயநிதிக்கு தி.மு.க தலைமை வழங்கி இருப்பது உடன்பிறப்புகளை முகம்சுளிக்க வைத்துள்ளது.

Similar News