மதுரையில் கெட்டுப்போன சிக்கனில் ஷவர்மா - வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

மதுரையில் உள்ள பல கடைகளில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி ஷவர்மா செய்த பகீர் உண்மைகள் வெளிவந்துள்ளன.

Update: 2022-05-05 11:15 GMT

கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது மதுரையில் உள்ள பல கடைகளில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி ஷவர்மா செய்த பகீர் உண்மைகள் வெளிவந்துள்ளன.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பள்ளி மாணவி அங்குள்ள பேக்கரி ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய சுமார் 52 சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர், அப்பொழுது கடை ஊழியர்களிடம் அசைவ உணவுகளை நன்கு வேகவைத்து சுத்தமான முறையில் வழங்க வேண்டுமெனவும் ஷவர்மா தயாரிக்கும் இயந்திரம் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


இந்த நிலையில் 5 கடைகளில் இருந்து கெட்டுப்போன சிக்கன் கறியில் ஷவர்மா செய்யப்பட்டது கண்டறியப்பட்டது, இதனால் அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த கடை என்னென்ன அது குறித்த விவரங்கள் என்ன என்பது விரைவில் தெரியவரும்.


Source - Maalai Malar

Similar News